R G Sports Academy

R G Sports Academy sports academy for rural boys and girls

30/01/2026

மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: வரும் 31.01.2026 முதல் 02.02.2026 வரை நடைபெறும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டும், மேலும் கோயில் திருப்பணிகள் நடைபெறுவதாலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பாத யாத்திரை வரும் பக்தர்கள் எளிதாக சென்று சுவாமி தரிசனம் செய்து வரவும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மருதமலை மலை மேல் செல்ல அனுமதி இல்லை.

பக்தர்கள் தங்களது வாகனங்களை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு தேவஸ்தான பேருந்து மூலமாகவும் மற்றும் மலைக்கோயில் படிக்கட்டு வழியாகவும் கோவிலுக்கு சென்று வரலாம்.

மருதமலை செல்லும் பேருந்துகள் - ஆம்னி பேருந்துகள்

கோவை மாநகரத்தில் இருந்து மருதமலை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் பாரதியார் பல்கலைக்கழகம் Gate No.II வழியாக உள்ளே சென்று தொலைமுறை கல்விக்கூட வளாகம் முன்பு பயணிகளை இறக்கிவிட்டு பின்பு மீண்டும் அங்கிருந்து பயணிகளை ஏற்றிகொண்டு கோவை மாநகருக்குள் வர வேண்டும்.

Parking: இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்

மருதமலைக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் அனைத்து பக்தர்களும் தங்களது வாகனங்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே கட்டாயம் பார்க்கிங் செய்யவேண்டும்

Parking No-1 - பாரதியார் பல்கலைகழகம் குடியிருப்பு வளாகப் பகுதி பார்க்கிங் (CAR)

Parking No -2 -பாரதியார் பல்கலைகழகம் தொலைமுறை கல்விக்கூடம் கேட்

அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகள்

Parking No-3- அரசு சட்டக்கல்லூரி மைதானம் (CAR)

Parking No-4-பொதிகை Pillar பார்க்கிங் (CAR)

Parking No-5 - பொதிகை ஆர்ச் பார்க்கிங் (Pass Holder, Kattalaithararkal, Ubayathararkal)

Parking No - 6 CTC Bus stand Back side (Two Wheeler only)

Parking No-7-தைலக்காடு பார்க்கிங் (Two Wheeler only)

Parking No - 8 - தைலக்காடு பார்க்கிங் (Bridge Side - Car)

Parking No-9-இந்திரா நகர் பார்க்கிங் (Car)

Parking No- 10 குமரன் ஹால பார்க்கிங் (Car)

Parking No- 11 வள்ளியம்மை கோவில் பார்க்கிங் (Car)

எனவே மருதமலை கோவிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்திற்கும், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் இல்லாமல் மேற்கண்ட இடங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கோவிலுக்கு சென்று வரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறையின் அறிவிப்பில் கூறியுள்ளதாவது, மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, வரும் 31.01.2026 காலை 08.00 மணி முதல் 02.02.2026ம் தேதி காலை 06.00 மணி வரை பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது.

ஒரு வழிப்பாதை

கோவை மாநகரில பல்வேறு பகுதிகளில் இருந்தும் லாலிரோடு ரவுண்டானா, தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி, பி.என்.புதூர், முல்லை நகர் செக்போஸ்ட் வழியாக மருதமலைக்கு வரும் அனைத்து இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளும் வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு சந்திப்பில் இடது புறம் திரும்பி மகாராணி அவென்யூ, சின்மயா வித்யாலயா பள்ளி, அருண் நகர் வழியாக அஜ்ஜனூர் சந்திப்பில் வலது புறம் திரும்பி பொம்மன்னன்பாளையம் ரோடு வழியாக கல்வீரம்பாளையம் அடைந்து மருதமலை வரவேண்டும்.

I. அரசு, தனியார் மற்றும் ஆம்னி பேருநதுகள் பாரதியார் பல்கலைக்கழக Gate No. II வழியாக தொலைமுறை கல்விக்கூட வளாகம் வந்து ஏற்றவும், இறக்கிவிடவும் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆம்னி பேருந்துகள் நிறுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

II. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து இலகுரக வாகனங்களும் மருதமலை அடிவாரம் தைலக்காடு வரை மட்டுமே சென்று குறிப்பிடப்பட்டுள்ள பார்க்கிங்கில் மட்டும் நிறுத்த வேண்டும்.

III. தடாகம் ரோடு இடையார்பாளையம் சந்திப்பில் இருந்து வடவள்ளி ரவுண்டானா வழியாக மருதமலை செல்லும் அனைத்து வாகனங்களும் வடவள்ளி தொண்டாமுத்தூர்ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி மேலே குறிப்பிட்டுள்ள கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலை செல்ல வேண்டும்.

IV.தடாகம் ரோடு ஆசிரியர் காலனி, கணுவாய், காளப்பநாயக்கன்பாளையம் வழியாக நவாவூர் பிரிவு வரும் அனைத்து வாகனங்களும் இடையார்பாளையம் சாலை வழியாக வடவள்ளி ரவுண்டானா வந்தடைந்து தொண்டாமுத்தூர்ரோடு சந்திப்பில் வலது புறம் திரும்பி மேலே குறிப்பிட்டுள்ள கல்வீரம்பாளையம் சந்திப்பு வழியாக மருதமலை செல்ல வேண்டும்.

V.சிறுவாணி ரோடு தொண்டாமுத்தூரில் இருந்து கோவை நகருக்குள் வரும் அனைத்து வாகனஙகளும் அஞ்சனூர் சந்திப்பு பொம்மன்னம்பாளையம் சந்திப்பில் வலது புறம் திரும்பி வேடப்பட்டி, பூசாரிபாளையம்ரோடு வழியாக தடாகம் ரோட்டை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

VI.மருதமலை அடிவாரத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கல்வீரம்பாளையம் சந்திப்பு நவாவூர்பிரிவு, வடவள்ளி ரவுண்டானா வந்தடைந்து வழக்கமான வழித்தடத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

VII. தடாகம் ரோடு லாலிரோடு சந்திப்பு வழியாகவும், வடவள்ளி இடையர்பாளையம்ரோடு, ரவுண்டானா வழியாகவும், தொண்டாமுத்தூர்ரோடு வழியாகவும் இலகுரக மற்றும் கனரக சரக்கு (Light and heavy goods vehicles) 31 ஆம் தேதி காலை 6 மணி முதல் பிப்ரவரி 2 ஆம் தேதி இரவு 10.00 மணி வரை மருதமலை வடவள்ளி சாலையில் செல்வதற்கு தடை செய்யப்படுகிறது.

எனவே மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்திற்கும், பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கும் எவ்வித இடையூறும் ஏற்படாமல் மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு தந்து உதவ வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rural Education and Sports Development foundation RG SPORTS ACADEMY oraganzing district level  inter school volley ball ...
04/01/2026

Rural Education and Sports Development foundation RG SPORTS ACADEMY oraganzing district level inter school volley ball tournament Boys and Girls U - 14 and U - 19 in memorial of sri V.C.Ramalingam snd sri N.Ranjendran From 06.01.2026 to 08.01.2026
The tournament will be conducted on Knock out come League basics .Arround 60 boys and girls team confirmed to particpat in the tournament .Case prize amount of Rs 56 K ,Trophys, certificates for all partcipants and best Players award will be distriputed.

*இலவச கைப்பந்து முகாம்*சோமையம் பாளையம், ரோகிணி கார்டன் பகுதியில் அமைந்துள்ள R G sports academy மைதானத்தில் பள்ளி மாணவ, ம...
29/04/2025

*இலவச கைப்பந்து முகாம்*

சோமையம் பாளையம், ரோகிணி கார்டன் பகுதியில் அமைந்துள்ள R G sports academy மைதானத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச கைப்பந்து பயிற்சி முகாம் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று மாணவர்களுக்கு கைப்பந்து எவ்வாறு விளையாட வேண்டும் என்ற நுணுக்கங்கள் தெரிவிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. R G sports academy founder S.R ஆறுச்சாமி அவர்கள் முகாமை துவங்கி வைத்தார்.
இப்பயிற்சி முகாமில் 30-ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

உடலையும் மனதையும் உறுதி செய்யவும், குழந்தைகளின் தனித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் இந்த வாய்ப்பினை அனைத்து பள்ளி மாணவ மாணவிகளும் பயன்படுத்தி கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

R.G ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இணைந்து இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கைப...
05/05/2023

R.G ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இணைந்து இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச கைபந்து (volleyball) பயிற்சி அளிக்க உள்ளனர் பயிற்சியில் ஈடுபடுவோர் க்கு டீசர்ட் மற்றும் சிற்றுண்டி, பயிற்சி சான்றிதழ் அளிக்கப்படும் கைபந்து பயிற்சி 2/05/2023 முதல் வரும் மே இறுதி வரை நடைபெறும் விருப்பம் உள்ளவர்கள் சோமையம் பாளையம் யமுனா நகரில் உள்ள R.G ஸ்போர்ட்ஸ் அகாடமி க்கு நேரில் வந்து இணைந்து கொள்ளலாம்🏀🏐🤸‍♂️🤸‍♀️🤽‍♀️🤽‍♂️
காலை 6.30 முதல் 8.30 வரை

R G Sports Academy is conducting free summer  volley ball camp from 1st May 2023 to 25th may 2023 at our R.G.Sports Acad...
02/05/2023

R G Sports Academy is conducting free summer volley ball camp from 1st May 2023 to 25th may 2023 at our R.G.Sports Academy ground .This camp was inaugurated by Skul Club President Mr Charles Fabian , secretary Rtn. Ramesh and Treasurer Mr P.k Ganesh our guest of honours where m/s Lalitha,Mr Rajendran and our founder and CEO Mr.S.R.Aruchamy ..

23/01/2023
ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கைப்பந்து போட்டி நடத்தப்பட...
16/10/2022

ஆர் ஜி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக பள்ளி மாணவர்களுக்கு 14 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கைப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

26/09/2022
We R G Sports Academy Conducted Moto Cross Event On 29-05-2022 in a successful way with More than 100 participants from ...
20/08/2022

We R G Sports Academy Conducted Moto Cross Event On 29-05-2022 in a successful way with More than 100 participants from Kerala ,Karnataka and Tamilnadu

Address

Yamuna Nagar
Nagar

Alerts

Be the first to know and let us send you an email when R G Sports Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to R G Sports Academy:

Share