Vethathiriya Gnanakkudil K Pudur MVKM Trust

Vethathiriya Gnanakkudil K Pudur MVKM Trust Our mission is to implement the Vethathiri Maharishi founded World Community Service Center Principles.

04-09-2026அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்❓  #கேள்வி: சுவாமிஜி,  #அறிஞர்களின்  #சிந்தனைகள் அவர்கள் கா...
04/09/2026

04-09-2026

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

❓ #கேள்வி: சுவாமிஜி, #அறிஞர்களின் #சிந்தனைகள் அவர்கள் காலத்தில் ஏற்றுக் கொள்ளப்படாதது ஏன்?

✅ #பதில்: குழந்தைகளுக்கு #உடை தைக்கும்போது அவர்களின் வளர்ச்சியை ஞாபகத்தில் கொண்டு தாராளமான அளவில் தைக்கிறோம். போகப் போக அதன் #உபயோகம் நீண்ட காலத்திற்குப் பொருத்தமானதாக இருக்கும்.

இதுபோன்றே, #ஞானிகள் உலக மக்களுக்குத் தரும் #அறநெறி #போதனைகளும், நல்வாழ்விற்கேற்ற திட்டங்களும் அவ்வக் காலத்திற்குச் சிறிது பொருத்தமில்லாமலும், அவசியமற்றவை போலும் சிலருக்குத் தோன்றலாம்.

#முற்கால #அனுபவம், #தற்காலத் #தேவை மற்றும் #சூழ்நிலைகள், #எதிர்கால #விளைவுகள் மூன்றையும் இணைத்து யூகிக்கும் திறனான #திரிகால #ஞானம் என்ற அகன்ற நோக்கில் ஞானியர்களுடைய திட்டங்களும் போதனைகளும் உருவாவதால், அவற்றில் அடங்கியிருக்கும் நன்மைகளைக் #குறுகிய #நோக்கம் உள்ள மயக்கவாதிகளாலும், பாமரர்களாலும் உடனே எளிதில் புரிந்து கொள்ள முடியாது. அத்தகைய #அறிஞர்கள் கருத்துக்களைச் சிறந்த சிந்தனையாளர்களும், நீண்ட எதிர்காலமுமே தெளிவாக விளக்கி வைக்கும்.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை #வேதாத்திரி மகரிஷி

(நாளையும் தொடரும்)
✖️ K.Pudur MVKM Trust, - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

  a     -   04  and   to know about  Once the   to know about consciousness comes, it would not settle down till it atta...
04/09/2026

a - 04

and to know about

Once the to know about consciousness comes, it would not settle down till it attains self . Hence, all those interested persons, should understand about consciousness. It is not possible to know about consciousness by merely reading or by . There is a need for formal inner observation exercise. It is easily obtainable only through the eligible guide.

Once the consciousness feel the life force as , it would from ‘third person stage’ to life force (first person stage). Then, it would condense further and experience the ultimate.

Meditation is an activity to realise the self as a ultimate truth, by passing through the various blossomed stages. It is also called as YOGA.

True wisdom is that to realise the self as ultimate, by one’s own experience. As the true blossoms amongst the people, the and grows in the . Hence, let us value the service of ‘Spreading true wisdom’ to the world as our great and .

- Maharishi
Delhi NCR Simplified Trust - www.fb.com/sky4peace
✖️ K.Pudur MVKM Trust, - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

 #வாழ்க்கை  #மலர்கள்:  #செப்டம்பர் 4அறிவை அறியத் தகுதியும் முறையும்அறிவை அறிய  #ஆர்வம் எழுந்து விட்டால் அது தன்னையறிந்து...
04/09/2026

#வாழ்க்கை #மலர்கள்: #செப்டம்பர் 4

அறிவை அறியத் தகுதியும் முறையும்

அறிவை அறிய #ஆர்வம் எழுந்து விட்டால் அது தன்னையறிந்து முடிக்கும் வரையில் #அமைதி பெறாது. எனவே, அவ்வார்வ #எழுச்சி பெற்ற அனைவரும் அறிவை அறிந்து கொள்ள வேண்டும். புத்தக மூலமாகவோ, வெறும் விளக்கங்கள் மூலமாகவோ அறிவுதனையறிந்து கொள்ள முடியாது. முறையான #அகநோக்குப் #பயிற்சி தேவை. தகுந்த வழிகாட்டி மூலமே இது எளிதில் கிட்டும்.

உயிராற்றலை உள்ளுணர்வாகப் பெற்றால் தான் #அறிவு, படர்க்கை நிலையொழிந்து உயிராகி நிற்கும். அதன் பிறகு, மேலும் ஒடுங்கி நிற்கப் பரமாகியும் அனுபவம் பெறும்.

இவ்வாறு, தானே தன்மலர்ச்சி நிலைகள் ஒவ்வொன்றையும் உள்ளடக்கமாகக் கடந்து, முடிவில் தன்னையே மெய்ப் பொருளாக உணர ஏற்ற #சாதனை தான் #அகத்தவம் ஆகும். இதனை #யோகம் என்றும் கூறுகிறோம்.

தானே அனுபவத்தால் தன்னை மெய்ப்பொருளாக உணரும் நிலையே #மெய்ஞ்ஞானம் ஆகும். மெஞ்ஞானம் மக்களிடையே மலரும் அளவிற்கு உலகில் அமைதியும், இன்பமும் ஓங்கும். எனவே, நமது கடமைகளில் “மெய்ஞ்ஞானம்” உலகில் மலர, ஏற்ற தொண்டினை மேன்மையுள்ள ஒன்றாக மதித்துச் செயலாற்றுவோம்.

- அருட்தந்தை #வேதாத்திரி மகரிசி
✖️ K.Pudur MVKM Trust, - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

03/09/2026

இன்று 04-09-2026 வெள்ளிக்கிழமை பிறந்தநாள் காணும் முக நூல் நண்பர்கள் அனைவரும் வாழ்க வளமுடன்! பல்லாண்டு பல்லாண்டு! வாழ்த்துகள்

*வேதாத்திரிய மெய்விளக்கம்  - 04-09-2026 உலக அமைதி நாள் 04-09-0041**இயற்கையை உணர வேண்டும்**நிலையாமையை நினைவிற்கொள் - பிறப...
03/09/2026

*வேதாத்திரிய மெய்விளக்கம் - 04-09-2026 உலக அமைதி நாள் 04-09-0041*

*இயற்கையை உணர வேண்டும்*

*நிலையாமையை நினைவிற்கொள் - பிறப்பு இறப்பு
நடுவே பூவுலக வாழ்வு; இதை மறக்கும் நிலையில் உள்ள மதியின் போக்கே மாயை.*

*இந்த உலகத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர்களெல்லாம் இன்று இல்லை.*

*இன்றைக்கு இருக்கக் கூடியவர்களெல்லாம் இன்னும் நூறு ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் இருக்க மாட்டார்கள். அப்படி எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பின்னர்தான், இன்றைக்கு இருக்கக் கூடிய மக்கள் இருக்கிறார்கள்.*

*இவ்வாறு மனதை விரித்துப் பார்த்தால் பிரிவினை என்பது இருக்காது. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான்; வாழ்கிறான்; முடிந்து போகிறான்.*

*முடிந்து போகும் நாள் அவனுக்குத் தெரியவில்லை. ஜீவகாந்த சக்தியில் பதிந்து இருக்கிறது. அது எந்த முடிச்சில் (Code) இருக்கிறது என்பதைக் க41ண்டுபிடிக்க முடியவில்லை.*

*அதனால்தான் எவ்வளவோ காலம் இருக்கப் போகிறேன் என்று நினைக்கிறான். அப்படிப் பார்த்தோமேயானால் கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப் போவதும் இல்லை.*

*இப்போது உலகம் முழுவதும் ஒன்றுகூடி விட்டது. ஒவ்வொரு நாட்டிலேயும் உள்ள மக்களில் பலர் பிற நாடுகளிலேயும் வாழ்கிறார்கள்.*

*இந்தக் காலத்தில் நான் அந்த ஜாதி, இந்த ஜாதி, அந்த நாடு, இந்த நாடு என்று வேறுபடுத்திக் கொண்டு, பிணக்கு வைத்துக் கொண்டு மனிதன் வாழும்போது துன்பத்தைத் தவிர இன்பத்தை அடைய முடியாது.*

*மனித இனம் தன்னுடைய மூலம், முடிவு இவற்றின் பெருமையை உணர்ந்து கொண்டால், இவ்வளவு பெருமைக்கு உரிய உலகத்தில் பிறந்து விட்டதனால் 'நானும் ஓர் உரிமையாளன். எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. எல்லா வசதிகளும் இருக்கின்றன' என்பது புரியும்.*

*நான் எப்படி வாழ வேண்டும்? என்று எண்ணிப் பார்த்தால், ஒவ்வொருவருக்கும் ஆயிரமாயிரம் இன்பங்களை அனுபவிக்க வேண்டிய அமைப்பு தான் இருக்கிறது.*

*அதற்கு முரணில்லாமல், நாம் செயல்பட வேண்டும். மற்றவர்களுக்குத் துன்பம் தராமல் வாழ வேண்டும். ஆனால், அதற்கு முரணாகச் செயல்பட்டு நாம் கெடுத்துக் கொள்கிறோம். ஒருவருக்கொருவர் தீங்கு செய்துதான் மனிதனாக வாழ வேண்டுமா?*

*இந்த உண்மையை உணர்ந்து கொண்டால் உலகத்தில் இன்பம், துன்பம், அமைதி, பேரின்பம் என்ற உணர்ச்சிகளோடு வாழக்கூடிய மனிதன் இயற்கை வளத்தை வாழ்வின் வளமாக மாற்றி செம்மையாகத் தானும் வாழலாம். பிறரையும் வாழ வைக்கலாம்.*

*உண்மையில் என்னிடத்தில், சமுதாயத்தில், இயற்கையில் எவ்வளவு உயர்வு இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டால் பயப்பட வேண்டியதே இல்லை. கவலைப்பட வேண்டியதே இல்லை. அது மாத்திரமன்று. இன்னொருவரிடம் கையேந்த வேண்டியதில்லை. மனிதனிடம் மனிதன் கேட்டு வாங்குவதற்கோ, கையேந்துவதற்கோ தேவை இல்லை.*

*இயற்கையினுடைய அமைப்பு மனிதனை எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் உள்ளவனாகவும் வைத்து இருக்கிறது. அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உள்ளதை உணர வேண்டும். இயற்கையை உணர வேண்டும்.*

*உயிருக்குள்ளாகத் தெய்வமே அறிவாக இருக்கிறது
என்று விளக்கிக் காட்டுவது தான் அகத்தவப்பயிற்சி.*

*துன்பங்கட்கு மூலம்*

பிறந்து வாழ்ந்து பின் இறந்துபோம் மனிதர்க்குப்
பேருலக இன்பங்கள் அனைத்துமே பொதுஉடைமை
மறந்து, மதிகுறுகி, மண்மீது எல்லைகட்டி,
மனிதர்கள் போராடும் மயக்கமே துன்பங்கள்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1258)

*துன்பம் தவிர்க்க*

இன்பத்தை முறையோடு, அளவுடன் அனுபவிக்கத்
துன்பமே பெரும்பாலும் தோன்றாது, ஆய்நதுணர்வீர்!

(ஞானக்களஞ்சியம் கவி: 1259)

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

*அறிவேதான் தெய்வம் என்று துணிந்துரைத்த அருட்தந்தையின் அன்புக்குரல்.*குறி தவறித் துப்பாக்கி    வெடிப்பதை ஒக்கும் நெறி தவற...
03/09/2026

*அறிவேதான் தெய்வம் என்று துணிந்துரைத்த அருட்தந்தையின் அன்புக்குரல்.*

குறி தவறித் துப்பாக்கி
வெடிப்பதை ஒக்கும்
நெறி தவறிச் செய்யும்
செயலின் விளைவு.

ஒவ்வொருவருடைய
தன்மைக்கேற்ப
சூழ்நிலைச்
சந்தர்ப்பங்களால்
ஒவ்வொருவருக்கும்
ஒரு கடமை ஏற்படுகிறது.
ஒவ்வொரு செயலிலும்
எந்த அளவு
நன்மை செய்ய முடியும்
என்பதைச் சிறிது
எண்ணிப் பாருங்கள்.

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

*அருள்தந்தை வேதாத்திரி மகரிசி*

*இறையுணர்வும் அறநெறியும் பெற்றுணர குரு உணர்வின் திருமுறைகள் இன்றைக்கு 04-09-2026 உலக சமாதான ஆண்டு நாள் 04-09-0041 நாம் உ...
03/09/2026

*இறையுணர்வும் அறநெறியும் பெற்றுணர குரு உணர்வின் திருமுறைகள் இன்றைக்கு 04-09-2026 உலக சமாதான ஆண்டு நாள் 04-09-0041 நாம் உணர*

விடுமுறைகளில்
வெளியூர் பயணம் சென்று
குடும்பத்துடன் தங்கி
மனம் விட்டுப் பேசி மகிழ்ந்து
சிரித்துக் கொண்டாடி
வர வேண்டும்.

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!*

*தத்துவஞானி வேதாத்திரி மகரிசி*

*தற்சோதனையில் சிந்தித்து இறையுணர்வும் அறநெறியும் பெற்றுணர வேதாத்திரியரின் ஞானக் களஞ்சியம் கவிகள்**இன்றைக்கு 04-09-2026**...
03/09/2026

*தற்சோதனையில் சிந்தித்து இறையுணர்வும் அறநெறியும் பெற்றுணர வேதாத்திரியரின் ஞானக் களஞ்சியம் கவிகள்*

*இன்றைக்கு 04-09-2026*

*இறுக்கிச் சுருக்கி இருப்பாக்கிக் கொள்வோம்*

*4.43: - உலக சமாதானம்*

*கவி: - 904- பெண்மையின் உயர்வு (1955)*

பெண்ணினத்தின் பெருமதிப்பை உணர்ந்தே உள்ளேன்.
பேருலகில் வாழுகின்ற மக்கள் எல்லாம்,
பெண்ணினத்தின் அன்பளிப்பே எனில் வேறென்ன
பெருமைஇதை விட எடுத்துச் சொல்லுதற்கு?
பெண்ணினத்தின் இயல்புபெற்ற மக்கள் தம்மை
பிறர்வளர்க்க அனுமதியார், மனமும் ஒவ்வார்.
பெண்ணினத்தின் விடுதலைக்கும் இந்தத் தியாகம்,
பேருலக அமைதிக்கும் அவசியம் ஆம்.

*வாழ்க வளமுடன்!*

*மனைவி நல வேட்பு விழா! *நாள்: 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை* *நேரம்: காலை 10-00 மணி முதல் 12-00 மணி வரை**இடம்: கோ.புதூர் மன...
03/09/2026

*மனைவி நல வேட்பு விழா!

*நாள்: 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை*

*நேரம்: காலை 10-00 மணி முதல் 12-00 மணி வரை*

*இடம்: கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை
11, ஞானக்குடில் இரண்டாம் தெரு, இரண்டாம் குறுக்கு, கோ.புதூர், மதுரை 625 007.*

*அன்புடன் அழைக்கிறோம்!*

*கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறங்காவலர்கள் உங்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்கி அன்புடன் அழைக்கிறோம்!*

*மகரிசி அவர்கள் அன்னையர் தினம், தந்தையர் தினம் கொண்டாடப்படுவதை போல, மனைவிக்கு நன்றி செலுத்தும் விதத்தில் மனைவியை மதித்து வாழ்த்த விழாக் கொண்டாட நினைத்தார்.*

*ஏறத்தாழ 20 ஆண்டு காலமாக வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, பிறந்த வீட்டை , உறவினர்களை, பிறந்த ஊரை விட்டுப்பிரிந்து, தன்னை நம்பி இல்லறம் ஆற்ற வந்த மனைவியை, ஒவ்வொரு கணவனும் என்றென்றும் போற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும்,*

*மனைவி நலவேட்பு விழா 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளையில் நடைபெற உள்ளது.*
@
*அன்பர்கள் தங்கள் தங்கள் வாழ்க்கைத் துணைவருடன் விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.*

*உன்னதமான இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நெகிழ்ச்சியான அன்புநலம் பெற்றுய்ய அனைவரும் வருக! வருக! என கோ.புதூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறங்காவலர்கள் அனைவரும் அன்புடன் அழைக்கிறோம்.*

*வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்*

03-09-2026அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்❓  #கேள்வி: சுவாமிஜி,  #தனித்திரு,  #பசித்திரு,  #விழித்திர...
03/09/2026

03-09-2026

அன்பர்களின் கேள்விகளும் – அருட்தந்தையின் பதில்களும்

❓ #கேள்வி: சுவாமிஜி, #தனித்திரு, #பசித்திரு, #விழித்திரு என்ற சொற்களுக்கு விளக்கம் என்ன?

✅ #பதில்: இவ்வார்த்தைகள் ஆன்மீகப் பயிற்சியிலுள்ளோருக்கு மிக உயர்ந்த சில கருத்துக்களை விளக்குகின்றன.

எந்த வெளிப்பொருளையும் நிகழ்ச்சியையும் #அறிவு நாடாமல் உன்னையே நோக்கி அது நிற்க வேண்டும் என்ற குறிப்பு “தனித்திரு” என்பது. உன் மூலம் நாடி அறிவு நிற்பது, உன்னில் ஒடுங்கி நிற்பது; எங்கும் நிறைந்த பூரணமான #அரூப நிலையில் நிற்பது என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

உன் மகத்துவத்தை அறிந்து கொள்வதில் #வேட்கை கொண்டிரு என்பதே “பசித்திரு” என்பதாகும். “ #நான்யார்? அறிவா? உயிரா? உடலா? இம்மூன்றும் வேறு வேறா? ஒன்றா? இவற்றிற்கு மூலமும் முடிவும் யாது?” என்பது போன்ற விளக்கங்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வத்தோடு இரு என்பதை பசித்திரு என்னும் வார்த்தை உணர்த்துகிறது.

பழைய ஞாபகங்களும், பிறர் விருப்பங்களும் உன் அறிவில் அடிக்கடி பிரதிபலிப்பதால் உன் #சிந்தனை அடிக்கடி திசை மாற்றம் அடையக்கூடும். அதனால் ஆன்மீகத் துறைக்கு முரணாக நீ செயலில் ஈடுபட நேரிடக் கூடும். ஆகையால் நீ மிகவும் உஷாராக, உன் நிலையில் மாறுபாடு அடையாமல், விழிப்பாயிரு என்று வலியுறுத்திக் கூறுவதே “விழித்திரு” என்ற வார்த்தையாகும்.

வாழ்க வளமுடன்!!

அருள்தந்தை #வேதாத்திரி மகரிஷி

(நாளையும் தொடரும்)
✖️ K.Pudur MVKM Trust, - https://x.com/VethathiriGnana
🤝 https://www.facebook.com/profile.php?id=61571368175907
📷 https://www.instagram.com/vethathiriyagnanakkudil/
🔔 ▶️ https://youtube.com/
🔊 https://whatsapp.com/channel/0029VaB0XY7HAdNYxrqigu01
📮 Telegram: https://t.me/+_Bgm46FYaMU3ZDBl

Address

11, Gnanakkudil, 2nd Street, 2nd Cross, E. M. G. Nagar, K. Pudur 2nd Street, 2nd Cross, E. M. G. Nagar, K. Pudur
Madurai
625007

Telephone

+919486950099

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vethathiriya Gnanakkudil K Pudur MVKM Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Vethathiriya Gnanakkudil K Pudur MVKM Trust:

Shortcuts

Share

Category