29/06/2026
இந்தியாவில் நடைபெற்ற AVC Men’s Volleyball Cup 2026 போட்டித் தொடரில், இந்திய கையுந்துப் பந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெண்கலப் பதக்கம் 🥉 வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
ஆசிய அளவிலான இந்த மதிப்புமிக்க தொடரில் இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றி, இந்திய கையுந்துப்பந்தின் வளர்ச்சியில் ஒரு புதிய அத்தியாயமாகும்.
இந்த சிறப்பான தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய நமது Lia Volleyball Club வீரர் Ramanathan R - Rama Maha Moorthy அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பான செயல்பாடு நமது கழகத்திற்கும், நமது சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது. 💐
ராமநாதன் அவர்கள், பயிற்சியாளர் குழு மற்றும் இந்திய அணியின் அனைத்து வீரர்களுக்கும் எங்களது கழகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் சாதனை எண்ணற்ற இளம் வீரர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமையும். 🇮🇳🏐🏆🔥